Monday, August 1, 2016

"தென்னை மர காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்'



திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள், தென்னை மர காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) இல.பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 548 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டாலோ, முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னை மர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும்.
இத் திட்டத்தில் சேருவதற்கு சில தகுதிகள் உள்ளன. தனிப்பயிராகவோ, ஊடு பயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ வீட்டுத் தோட்டத்திலோ குறைந்தபட்சம் 5 மரங்களாவது பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4 ஆம் ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள் 7 ஆம் ஆண்டு முதல் 60 ஆம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை, இப்போதைய நிலை பற்றிய சுயஉறுதி முன்மொழிவு அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தின்படி 4 வயது முதல் 15 வயது வரையிலான மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.900 இழப்பீடு பெற பிரீமியமாக ரூ.2.25, 15 முதல் 60 வயதுள்ள மரம் ஒன்றுக்கு ரூ.1750 இழப்பீடு பெற பிரீமியமாக ரூ.3.50 மட்டும் செலுத்தினால் போதுமானது. பிரீமியத் தொகையினை வரைவோலையாக அஐஇ ர்ச் ஐய்க்ண்ஹ கற்க், அலஐந ஆஹய்ந் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற் சர் 006010200018027 எடுத்து அதனுடன் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தென்னை சாகுபடி செய்ததற்கான பயிர் அடங்கல் 10 (1) பெற்று வேளாண்மைத் துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆண்டில் எந்த தேதியில் பிரீமியம் செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து ஓராண்டுக்கு பாலிசி வழங்கப்படும். ஒவ்வொரு பாதிக்கப்பட்ட விவசாயியும் இழப்பீடு கோரிக்கை மனுவைப் பூர்த்தி செய்து பாதிக்கப்பட்ட நாள்களில் இருந்து 15 நாள்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் 10 முதல் 30 ஆக இருந்தால் குறைந்தது 2 மரங்களும், 31 முதல் 100 ஆக இருந்தால் குறைந்தது 3 மரங்களும், 100-க்கும் மேற்பட்டதாக இருந்தால் குறைந்தது 4 மரங்களும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரங்களை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வார்கள். இத் திட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Source : Dinamani

No comments:

Post a Comment