Tuesday, August 9, 2016

ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு பயிற்சி


திருவாடானை அருகே கங்கை விலாசம் மற்றும் சிறுமலைக்கோட்டை கிராமங்களில் மானாவாரி பகுதி பயிர்களுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு முகாம் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் கெர்சோன் தங்கராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் ஒரு ஏக்கருக்கு தேவையான மணிச்சத்தினை வழங்ககூடிய 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 300 கிலோ மக்கிய தொழு உரம் ஆகிய இரண்டையும் சம பங்காக கலந்து சிறிது நீர்விட்டு கிளரி புட்டுமாவு பதத்தில் கலவை தயாரிக்க வேண்டும். பின்பு காற்றுப் புகாத அளவில் களிமண்ணால் அல்லது பிளாஸ்டிக் பைகளிள் 30 நாள்கள் அடைத்து வைக்க வேண்டும். இவ்வாறு ஊட்டமேற்றிய தொழுஉரத்தை தயாரித்து பயன் படுத்தி உரச்செலவை மிச்சப் படுத்தலாம். மேலும் ஊட்டமேற்றிய தொழு உரத்தை மானாவாரி நிலங்களுக்கு இடுவதால் பயிர் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது. வறட்சியைத் தாங்கி வளர்கிறது.
நிலத்தில் உள்ள மணிச்சத்து பயிருக்கு கிடைத்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.  வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள சான்று பெற்ற நெல் விதைகள், உயிர் உரங்கள், நுண் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் பாக்கியராஜ் எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் செளமியா, டயானா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment