Friday, August 5, 2016

குடல் புழுக்களை வெளியேற்றும் பூண்டு



நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், குடல் புழுக்களை வெளியேற்றும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குடல் புழுக்கள் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். நுண்கிருமிகள், நாடா புழுக்கள் போன்றவற்றால் நோய்கள் ஏற்படும். வயிற்று புழுக்கள் ஒட்டுண்ணி வகையை சேர்ந்தவை. அதிகளவில் இனிப்பு சாப்பிடுவது, காய் கறிகளை சுத்தம் செய்யாமல் உண்பது, நகங்களை அதிகமாக வளர்ப்பது போன்றவை குடல் புழுக்கள் ஏற்பட காரணமாகிறது.

பூண்டுவை பயன்படுத்தி குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், மஞ்சள், பூண்டு. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில் பூண்டுகளை துண்டுகளாக்கி போட்டு வதக்கவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதை இருவேளை சாப்பிடும்போது குடல் புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். செரிமானம் சீராகும். 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த கூடாது.

பூசணி விதையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

பப்பாளி விதையை பயன்படுத்தி குடல் புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கவும். இதில், நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கடி மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.

வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும்.  தரமற்ற, அதிகளவில் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியை சாறாக்கி தொப்புளில் 5 சொட்டுக்கள் விட்டு, தொப்புளை சுற்றி தடவுவதன் மூலம் வயிற்று வலி குணமாகும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment