Tuesday, August 16, 2016

மானிய விலையில் சான்று பெற்ற நெல் விதைகள் விநியோகம்

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில்,  விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதை கிராமத் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சான்று பெற்ற நெல் விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 அதன்படி கோபி, கூகலூர், வெள்ளாங்கோவில் வேளாண்மை விரிவாக்க மையங்களில்   ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சான்று விதைகளை உபயோகித்து பயனடையுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   விதைநேர்த்தி செய்து விதைப்பதால், விதை மூலம் பரவும் நோய்கள் ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறைகளை அமலாக்கம் செய்து நல்ல மகசூல் பெறவும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண் துறையின் மூலம் நெல் இயந்திர நடவு செய்யும் திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற அருகாமையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினைத் தொடர்பு கொள்ளலாம் என கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment