Friday, April 22, 2016

நெல்லியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 27, 28 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் நெல்லி பானங்கள், பழரசம், தயார் நிலை பானம், நெல்லிக்காய் ஜாம், அல்வா, பட்டர், கேண்டி மிட்டாய், பொடி, துருவல் தயாரிப்பு முறைகள், தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்குரிய வழிமுறைகள் கற்றுத் தரப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள் பயிற்சி கட்டணத்தை வரைவோலை மூலம் பேராசிரியர், தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை என்ற பெயரில் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து, மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பதிவு செய்து கொள்ள இறுதி நாள் ஏப்ரல் 27. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0422-6611340, 6611268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source : Dinamani

இயற்கை மண் வளம் பெருக கோடை உழவு


இயற்கையாக மண் வளம் பெருக கோடை உழவு முறையை விவசாயிகள் மேற்கொள்வது அவசியம் என்று விவசாயத் துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் பத்மாவதி கூறியதாவது:
சொர்ணவாரி பட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிடுவது இல்லை. அவ்வாறு விரும்பாத விவசாயிகள், தங்களின் நிலங்களில் கோடை உழவு முறையை மேற்கொள்ளலாம். இந்த உழவின் மூலம் நிலம் இயற்கையாக பல நன்மைகளைப் பெறுகிறது. குறிப்பாக, மழை பெய்யும்போது நிலத்தில் தேங்கும். அதனால் புல், பூண்டு போன்ற தாவரங்கள் முளைத்து வளர்வது தடுக்கப்படும். நிலத்தில் இருக்கும் பூச்சி முட்டைகள், கூட்டுப் புழுக்கள் ஆகியவையும் தடுக்கப்படும். இயற்கையாகவே மண்ணின் வளம் பெருகும்.
Source : Dinamani

மண் மாதிரி எடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை

மண் பரிசோனைக்கு மண் எடுப்பது குறித்து வேளாண்துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து வேளாண்துறையினர் விடுத்துள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது:  மண் மாதிரி ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால் தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும் இடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைபப்பட்ட காலத்தில் தான் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு நிலத்தின் மண் வெவ்வேறாக இருந்தால் தனித் தனியாக மாதிரி எடுக்க வேண்டும். 

எரு குவித்த இடம், வரப்பு வாய்க்கால் அருகில் மற்றும் மர நிழலில் மாதிரி எடுக்கக் கூடாது. ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியே மாதிரி எடுக்க வேண்டும். மண்மாதிரி எடுக்கப்படும் இடத்திலுள்ள இலை, சருகு, புல், ஆகியவைகளை மேல் மண்ணை செதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். நெல், கேழ்வரகு போன்ற தானியப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளுக்கு அரை அடி ஆழமும், கரும்பு, பருத்தி, வாழை, காய்கறி பயிர்களுக்கு முக்கால் அடியும், தென்னைக்கு 3 அடியும், மா, சப்போட்டா போன்ற பழ மரங்களுக்கு 6 அடி ஆழத்தில் குழி வெட்டி அடுக்கு வாரியாக, தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.

காலப்பயிர்களுக்கு ‘வி’ வடிவில் குழி வெட்ட வேண்டும். வெட்டிய குழியின் இரு ஓரங்களிலும் மண்வெட்டியின் தகட்டால் மேலிருந்து கீழ் வரை 1 சென்டி மீட்டர் கனத்திற்கு சீராக மண்னை சுரண்டி எடுத்து சேகரிக்க வேண்டும். இதுபோல் 1 ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் மண் சேகரித்து அதை சுத்தமான பிளாஸ்டிக் பை அல்லது சாக்கில் கொட்டி, நன்றாக கலந்து கல், கண்ணாடி, வேர் தண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும். பின்பு, நான்கு சம போக முறையில் அரைகிலோ மண்ணை எடுத்து துணிப்பையில் போட்டு கட்ட வேண்டும்.  

மண் மாதிரியுடன் விவசாயின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரி, கிராமத்தின் பெயர், நிலத்தின் பெயர், இறவை அல்லது மானாவாரி, பயிரிடப்பட்ட முன் பயிர் அடுத்து பயிரிடப் போகும் பயிர் பிரச்சனை இருப்பின் அதன் விபரங்களுடன் வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

source : Dinakaran

கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி?ஆட்சியர் அ.ஞானசேகரன் விளக்கம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கத்தை விட 5 டிகிரி வெப்பம் உயர்ந்துள்ளதால், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை வளர்க்கும் விவசாய பெருங்குடி மக்கள், கோழிப் பண்ணை, மாட்டுப் பண்ணை வைத்திருப்போர் தங்களது கால்நடைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், கறிக்கோழி வளர்ப்போர், முட்டைக்கோழியை வைத்து பராமரிக்கும் பண்ணையாளர்கள், நாட்டுக் கோழி வளர்ப்பவர்கள் அதற்கான தீவனத்தில் புரதச் சத்து அதிகமாக கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, அமினோ அமிலத்தின் விகிதாச்சாரம் மாறாமல் சரியாக கொடுப்பதுடன், தானிய சத்துக்களையும் குறைத்துக் கொடுக்க வேண்டும்.
அதிக எண்ணெய் சத்து மிகுந்த தீவனத்தை கோழிகளுக்கு கொடுத்து வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்கலாம். வெயில் தாக்கத்தை குறைக்க குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை கோழிகளுக்கு தேவையான அளவுக்கு மேல் குடிக்க வைக்கலாம்.
மேலும், கோழிப்பண்ணையைச் சுற்றி கொட்டகையின் இருபுறமும் குளிர்ந்த தண்ணீரில் நனைந்த சாக்குப் பைகளை (சணல்) கட்டிவிடலாம். கொட்டகையில் மின்விசிறி அமைத்து வெயில் தாக்கத்தை குறைக்கலாம். கால்நடைகளை வெயில் நேரத்தில் சூரிய வெளிச்சம் படும்படியான இடங்களுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலை 10 முதல் மாலை 4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கீற்று கொட்டகையில் மாடுகளை தங்கவைப்பதுடன், நிழல்தரும் மரங்கள் நிறைந்த பகுதியில் மாடுகளை கட்டி வைக்கலாம். மாட்டுக் கொட்டகையில் மின்விசிறிகள் பொருத்துவதுடன், மாடுகளை நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும்.
அதிமாக மூச்சுவாங்கும் கால்நடைகளுக்கும், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் வெப்ப அயற்சியைத் தடுக்கும் மருந்துகள் கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாடுகளை குளம், குட்டை, ஏரிகளில் உள்ள தண்ணீரை கால்நடைகளுக்குத் தெளித்து வெப்ப தாக்குதலைக் குறைக்கலாம். குளிர்ந்த தீவனப் பயிர்கள், திரவ உணவுகளைக் கொடுத்து கால்நடைகளை பாதுகாக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், கோழிப்பண்ணை வைத்திருப்போர், மாட்டுப் பண்ணை வைத்திருப்போர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தங்களது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Source : dinamani

காங்கயம் அருகே விளைந்த 7 கிலோ தேங்காய்


காங்கயம் அருகே, விவசாயி ஒருவரின் தென்னை மரத்தில் 7 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான தேங்காய் காய்த்துள்ளது.
காங்கயம் அருகே, மறவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அலுக்குட்டிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் ஒன்றில் விளைந்த குலையில், ஒரே ஒரு பிஞ்சு மட்டுமே இருந்தது. நாளாக நாளாக பிஞ்சு முதிர்ந்து, வழக்கத்துக்கு மாறாக, மிகப் பெரிய அளவிலான தேங்காயாக உருவானது.
தற்போது இளநீராக இருக்கும் நிலையில் அதைப் பறித்து எடை போட்டபோது அதன் எடை 7 கிலோவாக இருந்தது. சாதாரணமாக இளநீர்த் தேங்காய் 2 கிலோ எடைக்கு அதிகமாக இருக்காது.
இந்த 7 கிலோ எடை கொண்ட அதிசயத் தேங்காயை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

source : Dinamani

வளர வேண்டிய உயர் தொழில்...

ஒரு நாடு வளமான நாடு என்பதன் அடையாளமே அந்த நாட்டில் மற்ற துறைகளைவிட உணவு உற்பத்தியில் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும். அதனால்தான் வான்புகழ் வள்ளுவரும் விவசாயத்தின் தனித்துவம் கருதி, 
 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; 
 அதனால் உழந்தும் உழவே தலை.
 - என்றார். உலகம் சுழன்று சுழன்று பல தொழில்கள் செய்தாலும் அவை அனைத்தும் ஏர்த் தொழிலின் உயர்வை நம்பியே நடக்கிறது. அதனால் விவசாயத்தில் எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் அனைத்து தொழிலுக்கும் தலைமைத் தொழில் விவசாயமே என்று கூறுகிறார்.
 ஆனால், துணைக்கண்டம் முழுவதுமே விவசாயமும் விவசாயிகளும் ஒரு தேக்க நிலையிலும், தண்டிக்கப்பட்ட நிலையிலும் திக்கற்ற நிலையிலுமே உள்ளனர்.
 நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் விவசாயத் துறையின் நிலை குழப்பமாகவே உள்ளது. அதனால் அனைத்தும் குழப்பமாகி நாட்டின் வளர்ச்சியே தேக்கமடைந்துள்ளது. இந்தியாவில் நமக்கு இருக்கும் வாய்ப்பு நம்முடைய விவசாய நிலங்களும், அது சார்ந்த இயற்கை வளங்களுமே ஆகும். அதை சரிவர பராமரிக்காவிட்டால் அனைத்து வாய்ப்புகளையும் இழந்தவர்களாகிவிடுவோம். 
 ஏனெனில், இப்படியே விவசாயம் சென்றால் எதிர்காலத்தில் உணவிற்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலையும், தண்ணீர்ப் பற்றாக்குறை, சுகாதாரச் சீர்கேடு, வறுமை, சுற்றுச்சூழல் பாதிப்படைதல், அதன் காரணமாக இந்தியத் துணைக் கண்டம் வெப்பமடைதல், அதனால் வரும் இயற்கைப் பேரிடர்களால் நாம் பெரும்பாதிப்பு அடையும் நிலையும் வரலாம். எதிர்காலத்தில் மிக் பெரும் பிரச்னைகளாக இருக்கப் போவது இவைகளேயாகும். இவை அத்தனையையும் விவசாய உற்பத்தி மூலம் சரிசெய்து விடலாம்.
 யாரோ விவசாயத்தில் கஷ்டப்படுகிறார்கள், எப்படியோ விவசாயம் நடக்கிறது, உணவு உற்பத்தியாகிறது என்ற நிலைமாற வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட், விவசாயம் நடக்க உகந்த சூழ்நிலைகளை தாலுகா வாரியாக உருவாக்க வேண்டும்.
 இன்று போட்டியற்ற தொழிலாக விளங்குவதும், வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதும் விவசாயமே. மற்ற தொழில்கள் அனைத்திலும் கடும் போட்டி நிலவுகிறது. படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் அந்த தொழில் மீதும் அனைவருக்கும் ஈடுபாட்டையும் மேலும் அதிக அளவில் விஞ்ஞான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியையும் அதிக அளவில் பெருக்க முடியும்.
 எல்லோரும் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், மருத்துவராக வேண்டும், பொறியாளராக வேண்டும், தொழில் செய்ய வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர, விவசாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. அப்படியானால், விவசாயம் யார்தான் செய்வது? பிற தொழில்களுக்கு இருக்கும் மரியாதை விவசாயத்திற்கு இல்லாத நிலையே உள்ளது.
 ஊடகங்கள், பத்திரிகைகளிலும் சமூக பிரச்னைகள், அரசியல், தொழில் பற்றிய விவாதங்கள் செய்வது போல் விவசாயம் பற்றிய கருத்தரங்குகள் நடைபெறுவதில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் ராணுவப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் அனைவரும் ஈடுபடுவது போல நம் நாட்டில் அனைவரும் விவசாயத்தில் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய வேண்டும்.
 இனி விவசாயம் செழிக்க வேண்டும் எனில் தற்போதைய உலகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்முடைய விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நவீன இயந்திர முறை விவசாயம் உருவாக வேண்டும். மிகப் பெரும் வணிகக்கூட்டாண்மை நிறுவனங்கள் விவசாயத்தில் குறிப்பிட்ட அளவு பங்களிப்புச் செய்ய வேண்டும். சிறு சிறு நிலங்களை இணைத்து கூட்டுப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். 
 நம் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கே அதிக அளவில் இருப்பது போன்றும், நமது ஏற்றுமதியில் மற்றவற்றைவிட அதிக அளவில் விவசாயப் பொருள்களையும், இறக்குமதியில் குறைந்த அளவில் விவசாயப் பொருள்களையும் இறக்குமதி செய்யும் வகையில் விவசாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாடும் நலம் பெறும். விவசாயிகளின் நிலையும் வளமாகும்.
 விவசாயிகளின் வருத்தமும், கண்ணீரும் நாட்டின் சாபக்கேடாகும். உலக அளவில் நாம் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவாக வேண்டும் எனில், பிற நாடுகள் பிற விஷயங்களில் கவனம் செலுத்துகின்ற நிலையில் நாம் வித்தியாசமாக, மாறுபட்ட அணுகுமுறையாக விவசாயத்தில் கவனம் செலுத்தி அதிக உற்பத்தி, அதிக ஏற்றுமதி, அளவற்ற அன்னிய செலவாணி என்று உருவாக்கலாம். நாம் பொருளாதார பலம் கொண்ட வல்லரசு என்ற நிலையை எளிதில் அடையலாம்.
 இனி விவசாயத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களாக விவசாயம் செய்பவர்களுக்கு மரியாதையையும், கெளரவத்தையும் உருவாக்க வேண்டும். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும், எல்லா வேலைகளுக்கும் ஆள்கள் கிடைக்கிறார்கள். ஆனால், விவசாயத்திற்கு மட்டும் ஆள்கள் கிடைப்பதில்லை. 
 எனவே, விவசாயம் செய்வதற்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குதல், அவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்தல், அந்த தொழில் மீது அவர்களுக்கு ஈர்ப்பை உருவாக்குதல், அவர்களுக்குச் சரியான ஊதியம் கிடைக்க வழி செய்தல் போன்றவற்றை கவனிப்பதற்கு அரசு ஊழியர்களை உருவாக்க வேண்டும். அது சார்ந்த அலுவலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
 விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்கள் சிலவற்றிற்கு அதிக விலையும், சிலவற்றிற்கு உற்பத்தி செலவுகூட கிடைக்காத வகையிலும் உள்ளது. அதை மாற்றும் வகையில், தற்போதைக்கு எந்தப் பயிர் அதிகத் தேவை, எந்தப் பயிர் தேவைக் குறைவு, ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளவை எவை என்பதையும் அவ்வப்போது விவசாயிகளுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். சமச்சீராக அனைத்து பயிர்களையும் உற்பத்தி செய்ய வழி காணவேண்டும்.
 மேலும், விளையும் பொருள்களை சேதமின்றி பதப்படுத்த சேமிப்புக் கிடங்குகள் தாலுகா வாரியாக உருவாக்கப்பட வேண்டும். எந்தப் பகுதிகளில் எந்தப் பயிர் செழிப்பாக வளரும் என்பதையும், ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அந்த மண் வளத்துக்கு ஏற்ற வகையில் இயற்கை விவசாயத்தின் அடிப்படையில் மண் வளம் கெடாதவாறு உரம் இடும் முறையை கண்டறிதல் வேண்டும். மின் சேமிப்பு, நீர் சேமிப்பு ஏற்படும் விதமாக அனைத்து புன்செய் விளை நிலங்களும், மலைச்சரிவு நிலங்களும் நுண் நீர்ப் பாசன முறையைப் பெற வேண்டும்.
 மண்வளம் கெடாமல் இருக்க இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும். ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றால் மண்வளம் கெடாமல் விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் விவசாயம் இயந்திர மயமாக்கப்பட வேண்டும்.
 மாணவர்களின் பாடப் புத்தகங்களில் விவசாயம் பற்றிய கருத்துகளை இளமையிலேயே பதிய வைக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் அனைவரும் பார்க்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி விவசாயம் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.
 விவசாயம் இனி கிராமங்கள் மாத்திரம் இல்லாமல் நகரங்களில் நடைபெற வேண்டும். வீட்டின் மாடியில் காய்கறி வளர்ப்பு, வீட்டின் காலி இடங்கள் மற்றும் பொது இடங்களில் மரம் வளர்ப்பின் மூலம் கார்பன்-டை-ஆக்ûஸடு போன்ற நச்சு வாயுக்களை சமன் செய்தல், ஆக்சிஜன் உற்பத்தி, வெப்பமயமாதலைத் தடுத்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
 மகாகவி பாரதி சொன்னது போல் "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்பதற்கு இலக்கணமாக முக்கிய கலைச் செல்வமான விவசாயத்திற்கு வெளிநாடுகளில் உள்ள நமக்கு உபயோகமான வழிமுறைகளைக் கண்டறிந்து நம் நாட்டில் செயல்படுத்த வேண்டும். 
 விவசாயம் சார்ந்த துணைத் தொழில்கள் செழிப்புற வேண்டும். மரம் வளர்ப்பு, விவசாயம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிந்து விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
 வறுமையின் தாயகம் உணவுப் 
 பற்றாக்குறை;
 வன்முறையின் பிறப்பிடம் உணவுப் 
 பற்றாக்குறை;
 அமைதியின் இருப்பிடம் உணவு 
 உற்பத்தியில் தன் நிறைவு 
 }என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
 விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக நாடு முழுவதும் எவ்வளவோ காயப்பட்டு இருக்கிறார்கள். சோதனைகளைத் தாங்கி இருக்கிறார்கள். இயற்கைச் சீற்றங்களினால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
 இனியாவது அவர்கள் வாழ்வில் மாற்றம் வர வேண்டும். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கொஞ்ச நஞ்சம் பேரின் மனதில் நம்பிக்கை குறையுமேயானால் இந்தியாவின் ஆரோக்கியம் கெட்டு உலக நாடுகளின் மத்தியில் தரம் தாழும் நிலை கண்டிப்பாக உருவாகும். இதுவரை விவசாயம் செய்து, உணவு உற்பத்தி செய்து, வயிற்றுப் பசி போக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும், நன்றியும் சொல்வோம்.
 சுதந்திரம், இட ஒதுக்கீடு, சமூகப் பிரச்னைகளுக்கு ஒன்று சேர்ந்தது போல் அனைவரும் சேர்ந்து வீழ்ந்து கிடக்கும் விவசாயத்தைத் தூக்கி நிறுத்த சபதம் ஏற்போம். பூமியின் ஆரோக்கியமே எங்கும் பசுமையாக இருப்பதுதான் என்பதை நிலை நாட்டுவோம்.
 அனைத்துத் தொழில்களுக்கும் தாயாக இருப்பது விவசாயமே! பிற தொழில்கள் அனைத்தும் விவசாயம் என்ற தாய் ஈன்ற குழந்தைகளே! விவசாயத்தின் மீது அனைவருக்கும் கவனம் என்பது காலத்தின் கட்டாயம். காலத்தின் தேவை மட்டுமன்றி நம்முடைய முக்கிய கடமை அதுவே யாகும்.
 வாழ்க விவசாயம்! வளர்க விவசாயிகளின் பொருளாதாரம்!
 
 கட்டுரையாளர்:
 விவசாயி.

Source : Dinamani

Award for Himachal for implementing Soil Health Card scheme


Himachal Pradesh has bagged another National Award in Agriculture sector for 2015-16 as Hamirpur district has been selected for the Prime Minister’s Award for Excellence in Public Administration.

The award is given for excellent implementation of Soil Health Card Scheme, Upma Chowdhary, Additional Chief Secretary (Agriculture) said.
The Soil Health Card Scheme is one of the four schemes- three others being Swachh Bharat, Gramin Swachh Vidyalaya and Pradhan Mantri Jan Dhan Yojana - identified by the Union Government to be awarded under Prime Minister’s Award for Excellence in Public Administration, she said.
Only two districts, Hamirpur in Himachal and Balrampur in Chhattisgarh, have been given award for implementation of this scheme and Himachal bagged the first position among the Hilly and northern States.
The award was presented by Prime Minister in New Delhi on Thursday and carries a cash prize of Rs 10 lakh. The State was recently awarded the national-level ‘Krishi Karman Award’ for increase in total foodgrains production for the year 2014-15 in Category II States.-PTI

Source : The Hindu 

More opt for coconut farming


Despite the fluctuations in the prices of coconut at periodic intervals, the acreage under the crop has been interestingly on a rise in the district for the past many years. From 51,748 hectares registered during 2011-12 financial year, the area coverage of coconut in the district has risen to 53,660 ha in 2012-13 fiscal and to 56,404 ha in 2013-14 fiscal.

The acreage stood at 56,807.8 ha by 2015. In the price front, the farmers are now getting on an average of only about Rs.6 to Rs.7 for a nut against Rs. 12 obtained for a harvested nut.
The price realisation of copra too has been dwindling for quite sometime. “More and more farmers are still opting for coconut is because of the reality that the raising of the crop needed lesser labour as well as maintenance works like removal of weeds, pulverisation of soil and in situ ploughing vis-a-vis many seasonal/annual crops.
“Considering these aspects, many farmers are thinking on the lines that even if the prices fall a bit they can attain sustainable income without facing any operational losses for a long period due to its perennial nature”, pointed out P. Santhanakrishnan, a coconut farmer who had earlier served as Joint Director of Agriculture in Tirupur.
Many farmers have now started floating consortium to market both raw coconut and value-added products tapping the prospects outside the State and the country.
S. Selvaraj, who had floated a coconut farmers’ producer company in 2015 as a joint initiative with many hundreds of fellow farmers from Udumalpet and Madathukulam areas, feels that attractive incentives given through Coconut Development Board specifically for area expansion was also contributing to the enhancement of the acreage.


Source : The Hindu 

New model developed to predict monsoon



DARK CLOUDS:Holding out hope for farmers


A team of Swiss scientists has developed a novel prediction approach that can forecast Indian monsoon’s yearly onset and withdrawal significantly earlier than using previously available methods. Based on a network analysis of regional weather data, the team from the Potsdam Institute for Climate Impact Research and the University of Zurich will soon propose this approach to the Indian Meteorological Department (IMD).
The summer rains are of vital importance for millions of farmers feeding the subcontinent’s population.
“We can predict the beginning of the Indian monsoon two weeks earlier and the end of it even six weeks earlier than before — which is quite a breakthrough given that for the farmers, every day counts,” said lead researcher Veronika Stolbova from PIK and University of Zurich.
“We found that in north Pakistan and the Eastern Ghats, a mountain range close to the Indian Ocean, changes of temperatures and humidity mark a critical transition to monsoon,” Stolbova explained. Conventionally, the focus was always on Kerala.
The scientists tested their method with historical monsoon data. It gives correct predictions for onset in more than 70 per cent and for withdrawal in more than 80 per cent of the considered years.
In addition, the new scheme notably improves the forecasting of monsoon timing during years affected by the global weather phenomenon El Nino-Southern Oscillation (ENSO), particularly in its La Nina phase. This phenomenon significantly alters monsoon timing and decreases the prediction accuracy of existing methods. The major innovation, the authors say, is to combine the network analysis with the subtle statistical analyses of the early warning signals for the monsoon onset and withdrawal.
Global warming due to greenhouse-gas emissions already affects the Indian monsoon and — if unabated — is expected to do even more so in the future.IANS


Source : the Hindu 

Customised management proposed for cattle in summer



Dairy farmers are compelled to dispose of theircows owing to lack of potable water.

At a time when there is enormous rise in temperature in the State, dairy cattle require customised management measures, T.P. Sethumadhavan, Director of Entrepreneurship, Kerala Veterinary and Animal Sciences University (KVASU), has said.
Addressing an interactive programme organised by the varsity to sensitise the farming community on the steps to be adopted during extreme summer, at Padinjarethara here on Thursday, Dr. Sethumadhavan said customised management measures would help farmers maintain milk production.
“Animals need to be supplemented with green fodder or fish liver oil, along with mineral mixtures, to address Vitamin A deficiency during summer,” he said. Precision feeding and management measures must be adopted to maintain optimum production, he added.
“Scientific housing and milking management measures should be practised to prevent mastitis. Keeping cattle in highly-ventilated bedded sheds or under the shade of trees after frequent showers will reduce heat stress. There are reports that dairy farmers are compelled to dispose of their cows owing to lack of potable water. But animals should not be made to drink from stagnant ponds,” Dr. Sethumadhavan warned.
Considering that dairying is an enterprise where water requirement was high as compared to other livestock ventures, the varsity has developed an automatic thermo control system based on temperature humidity index recently to address the issue, and the technology will be transferred to the farming community soon, Dr. P.T. Sooraj, Assistant professor and head of cattle breeding farm, Thumboormuzhy, who developed the system, said. More than 150 farmers attended the programme.
Animals should be supplemented with green fodder or fish liver oil, along with mineral mixtures, to address Vitamin A deficiency.
T.P. Sethumadhavan,
Director of Entrepreneurship,
KVASU

Source : The Hindu 

A fresh take on food: Farm-to-table is the new gourmet in Delhi



It can’t get better than this for health-conscious gourmands! City chefs have sped up their efforts to popularise farm-to-fork gourmet. This practise involves production of seasonal ingredients at farms, without any chemicals or pesticides, and bringing diners fresh produce infused with local flavours.
“With the rise in the usage of synthetic pesticides and chemical fertilizers in farming, the produce is no longer healthy for consumption. To tackle this , a lot of emphasis is being laid on organic farming. We are going back to the organic way of growing and using produce to provide our diners with a healthier meal,” says Chef Ajay Anand, Hotel Pullman, Aerocity. After practising the concept in France, the chef introduced farm-to-table gourmet at the hotel’s restaurant - Pluck. “I learned the farm-to-table concept in France when I worked for Michelin starred Chef Georges Blanc. His idea of making his own kitchen garden influenced me. We offer the freshest ingredients in our seasonal menu that is fused with local flavours. We pick up the ingredients just before dishing out a meal. The satisfaction of cooking and serving what you have grown yourself is unmatched,” he says. Their menu boasts of Scallop Carpaccio with Truffle and Cauliflower; Parmesan Burnt Garlic with Oat Meal Streusel roll over Melba; Quinoa Broccoli Cake; Roasted Cod Candied Orange with Lentil Stew; Madeira Jus and Burnt Butter and Matcha; Green Tea Custard with Preserved Lychee and Jasmine Rice.

Caara Café uses ingredients from its farms.

Another eatery in the city practising this trend is Caara Café, Kasturba Gandhi Marg. “We believe in bringing cooking back to its origins. We take vegetables from our own chemical-free farms, plan menus around the seasons and create dishes that celebrate this produce. Fast food is so removed from fresh produce with the evolution of preservatives and additives. This is what we want to change. We have Superfood Salad (that has rocket, beetroot, pumpkin, pumkin seeds, raisins, pomegranate, broccoli and feta); Tomato, Mozzarella and Pesto Panini; Watermelon, Feta, Basil Salad with Balsamic Vignette, Zucchini Linguine with Pesto and Crushed Peanuts. We keep changing the ingredients to try and use as much of our own-grown veggies. Our new menu will have Spinach, Kale and Tomato Shakshouka; Mini Foccacia with Cherry, Tomato, Zucchini and Beans,” says Ambika Seth, co-owner.

Dusit Devrana produces seasonal crops at their farm.

Chef Nishant Choubey, Dusit Devarana, says gourmands love the idea of having their meals made of fresh, chemical-free ingredients. “Farm -to-table is a very interesting and evolving concept. Today, customers don’t just want to eat food that is just delicious or well-presented. They want something which is fresh and rich in nutrients. All our ingredients are locally grown in our farm. We want all our diners to taste these ingredients in their just-picked glory. I foresee that the concept of health bars, first-press juices, protein shakes and other high fibre food is really going to takeover in the future,” he says. You can try Organic Khichdi with Spiced Tofu and Salsify; steamed farmed Fish with Lime and Chilli; Organic Beetroot Salad with Quinoa, Poached Plum and Toasted Sesame and Andaman Tuna with Wasabi and Yuzu at the resort in Samalkha, NH-8.
The farm-to-table concept has gone online, too. InnerChef lets you order fresh food with just a click of your mouse. “We are actively pursuing farm-to-fork strategy across five cities ( Delhi NCR, Bangalore, Mumbai, Chennai and Hyderabad). Our idea is to develop a network of local farms across India and source our fruits and vegetables directly from the local farms. In fact ,we are launching a new salad soon for which we are sourcing from a Delhi-based farm,” says Rajesh Sawhney, co-founder of the online platform.

Source : Hindusthan Times 

Centre to release 10,000 tonnes of pulses from buffer stock to check price rise


To control the spike in prices of pulses, the Centre has decided to release 10,000 tonnes of the staple, mainly tur and urad, from the buffer stock to ensure its availability at reasonable prices.

The decision comes days after the Wholesale Prices Index reported close to 35 per cent rise in the prices of pulses.
The Centre is also initiating procurement of rabi pulses with the target to procure around one lakh tonnes of chana and masur to build the buffer stocks further, a Food Ministry release said on Thursday.
In addition, to moderate price volatility in the forward market and discourage speculation, market regulator Securities and Exchange Board of India has decided to implement various regulatory measures on chana contracts, which include increase in the margin requirement.
State governments have also been requested to avail the benefit of buffer stocks to manage prices as also send in their requirements immediately to ensure timely allocation of stock, the Ministry said, adding that States had already been empowered to impose stock limits on the pulses to ensure easy availability.
During the kharif marketing season in 2015-16, government agencies procured about 50,000 tonnes of pulses from farmers and contracted 25,000 tonnes for import, the release said. Private traders imported a total of 55 lakh tonnes in 2015-16, according to official figures.

Source : Business Line 

Thursday, April 21, 2016

Milk flow up by 15% this summer






The slump in the price of rubber and cardamom appears to have compelled farmers in Kottayam and Idukki districts to recoup some of their losses through dairying.
As a result, milk production is up 12 to 15 per cent this season and the usual annual summer shortage has shrunk considerably, say sources in the Kerala Cooperative Milk Marketing Federation (Milma).
The collection of milk by dairy societies in Kottayam district has gone up around 15 per cent this season compared to last year, said a Milma official.
Rise in milk collection in Idukki and Kottayam together is an average 12 per cent, said the official pointing out that the fall in the price of cash crops could be the key reason behind the development.
Farmers are taking better care of their animals and also increasing the number of heads, the official added.
Though the dry months of March, April and May see a dip in production, the story has been different this season, thanks largely to the better milk collection in Kottayam and Idukki districts, which are part of the Central zone of the dairy cooperative comprising also Ernakulam and Thrissur districts.
Chairman of Ernakulam Regional Cooperative Milk Producers’ Union P.A. Balan said the farmers have also been bolstered by the payment of substantial incentives this year.
Between November and April, a total of Rs.11 crore has been paid to the farmers in incentives in addition to the normal milk prices.
Deadline
Though the deadline for payment of the incentives is April, the window of time may be extended to May considering the response from the farmers.
A senior Milma official also said that dairying had been made attractive with farmers realising that there was a steady market for the produce when compared to other produce like natural rubber and cardamom.
“We are ploughing back the profits,” he said underlining the positive response from the dairy farmers.
Market intervention
The large network had resulted in effective market intervention by the milk cooperative whereas in the case of commodities like rubber and cardamom, government support system had failed to reach the farmers in time, he added.
Though there are around 3 lakh dairy farmers registered in the Ernakulam region, around 50,000 farmers bring milk to the societies twice daily.
Milk production in the region has averaged 2.68 lakh litres per day and it is now down to about 2.55 lakh litres now. The gap is marginal, the Milma official added.
Procurement in Kottayam district stands around 42,000 litres per day.

Source : The Hindu 

Pig rearing checks migration from Pachamalai



GREEN SHOOTS:A landless agricultural labourer rearing pigs, under the Integrated Tribal Development Project at Pachamalai in Tiruchi disitrict.— PHOTO: B. VELANKANNI RAJ


A special vocational programme to promote pig rearing has come as a boon for the landless agricultural workers belonging to the Irula community living on the interior and isolated hamlets in Pachamalai.
Migration of people belonging to the Scheduled Tribes and Irula community has been a major challenge leading to various socio-economic problems. The programme being implemented under the Integrated Tribal Development Programme of the National Bank for Agricultural and Rural Development seeks to check this trend.
These agricultural workers, till a couple of years ago, relied on the farm work available in Kerala. But due to the implementation of the Integrated Tribal Development Programme a couple of years ago, migration has come down.
Thuravathy, one of the women beneficiaries near Top Sengattupatti, says she was given three female and one male pigs so that she could eke out a livelihood without any economic setback.
“It is only after I got these pigs that I could admit my son R. Rajkumar into a nearby school,” she says, indicating that due to exodus, she could not admit her son into any school in Kerala.
Possessing pigs is a matter of pride for the people belonging to these communities in the Pachamalai hills. “People present pigs as their family gift during domestic festivals or community gathering,” says S. Suresh Kumar, Assistant General Manager, National Bank for Agriculture and Rural Development.
The hills is spread over two revenue districts of Tiruchi and Salem and the programme is being implemented simultaneously in both the districts.
As many as 41 beneficiaries — 25 in the Tiruchi district and 16 in the Salem district — have been identified under the scheme for rearing pigs. Free feed is also supplied for ensuring proper rearing of pigs, says Mr. Kumar.

Source : The Hindu 

How to keep animals cool


The departments of agriculture and animal husbandry have issued a set of directives on how domestic animals need to be protected from the heat as mercury levels soar.

The Animal Husbandry Department has been providing treatment to several farm animals in Kannur, Kozhikode and Punalur after they were found to be suffering from heat exhaustion.
Lack of summer showers and non-availability of green grass pose a threat to the life of cattle.
Cattle and dogs are the worst affected in heat.
Farm animals should not be used in the sun for long hours and they should not be allowed to roam free for long. There should not be any drastic change in the daily diet of animals.
Animals should be provided water in large quantities and should be tethered under the shade. Vitamins and minerals should be included in the feed, the official release said.

Source : The Hindu

Cotton season: Agriculture department starts drive against whitefly amid staff crunch



cotton, cotton crop, cotton production, whitefly, whitefly cotton, Punab Agriculture department, Punab, Agriculture department, Cotton season, Punjab, punjab newsWhiteflies had damaged cotton crops last season. Gurmeet Singh
EVEN AS the state agricultural department has started its drive to control the whitefly pest that inflicted extensive damage to the cotton crop last season, shortage of staff in across Punjab is making their job difficult. As per the latest data from the agriculture department, 575 of the total 938 posts of Agricultural Development Officers (ADOs) are lying vacant across Punjab, with the state having no immediate plan to start the recruitment process.
A majority of these vacant posts lie in the cotton belt of Malwa, including Bathinda, Sri Muktsar Sahib and Mansa. While farmers had blamed spurious pesticides for the whitefly attack, Agriculture Minister Tota Singh and Punjab Agricultural University vice-chancellor BS Dhillon blamed the farmers for not being aware of the methods to be followed to save their crops. ADOs are field officers who are responsible for interacting with farmers at the ground level and pass on their queries to higher authorities.
They educate them about the right agricultural practices, provide them with samples of pesticides and fertilisers for testing, visit villages to keep an eye on the crop and press the alert button if symptoms of a disease are found. With the sowing season staring at their face, the agriculture department has started transferring ADOs from Ludhiana and Amritsar (where posts are filled) to the cotton belt of Malwa.
The officials, however, have been told that their transfers will be valid only till the cotton harvesting season, which ends in October. As many as 73 out of 223 sanctioned posts of Agriculture Officers (AOs) are also lying vacant across the state. As per the latest data collected by The Indian Express from the agriculture department, 31 out of 49 posts of ADOs in Bathinda are vacant. The situation is worse in Mansa where only 4 posts have been filled against 28 sanctioned.
In Muktsar, only 5 posts have been filled against 25 sanctioned posts. In Sangrur, out of the 35 sanctioned posts, 27 are lying vacant while in Fatehgarh Sahib 21 out of 26 posts are vacant. In Moga, 21 posts are vacant out of the 33 sanctioned posts. Speaking to The Indian Express, one of the ADOs said, “There is a separate marketing wing in our department which has 138 sanctioned posts. It is unbelievable that a state like Punjab, which is the bread basket of India, has 90 vacant posts in the marketing department which is responsible for educating farmers. They are also responsible for touring mandis and see that there is no discrepancy in procurement. This department exists only in papers as those 40 employed men are diverted to other works due to acute shortage.”
Source : Indian Express

Efforts on to cover more farmers under crop insurance: CM Devendra Fadnavis



Tackling Maharashtra drought: Water conservation, environmental preservation to be linked - See more at: http://indianexpress.com/article/cities/mumbai/devendra-fadnavis-tackling-maharashtra-drought-water-conservation-environmental-preservation-to-be-linked/#sthash.Cq378HEN.dpufMaharashtra Chief Minister Devendra Fadnavis
A meeting of Pradhan Mantri Bima Yojna, chaired by Chief Minister Devendra Fadnavis, was held on Wednesday to enhance crop insurance cover for farmers in the state. At the meeting, the chief minister urged financial institutions and bank officials to ensure the scheme reaches the needy and brings relief to farmers, officials said.
Earlier, Bank of Hyderabad donated Rs one crore to the state government towards the CM Relief Fund for the ongoing Jalyukta Shivar Abhiyan.
A Class III student from R N Podar School in the city collected Rs 25,000 and donated to it to the chief minister. Fadnavis said, “I am extremely touched.”
Source : Indian Express

Start turmeric cultivation on small scale: PAU tells farmers


Ludhiana: The agronomy experts of Punjab Agricultural University (PAU) have advised the farmers to start commercial cultivation of turmeric only on small scale, for gaining experience in production as well as marketing of the produce.



According to Thakar Singh, head of the department of agronomy, turmeric, commonly known as 'haldi,' offers a good scope for diversification of cereal based cropping system. He added that It is largely used in diversified forms such as a condiment, colouring agent, curry powder and for flavorings. "Besides, it is also used in drug and cosmetic industries, he said, adding that the turmeric can be grown and processed easily for household purpose" Agronomy head said.


Another expert, Amandeep Singh Brar said, "As the consumption of turmeric is limited in each house, large-scale cultivation of turmeric can cause glut in the market and may lower the prices." Before going for commercial cultivation of turmeric, knowledge about its processing should be gained and market avenues should be explored, he advised. The turmeric cultivation in the state will be helpful in meeting its own demand as well as boosting the country's export, he observed.


The experts have also cautioned the farmers against the cultivation of white turmeric, which is not useful for making dried ginger (sund). "Many times, farmers cultivate white turmeric by considering it as dried ginger (sund). Sometimes, people also sell the seed of white turmeric as dried ginger (sund)," they observed. The experts have urged the farmers not to sow white turmeric.

Source : TOI 

Kadambot Siddique named ambassador for International Year of Pulses


Indian researcher and professor, Kadambot Siddique, was named Ambassador for the International Year of Pulses in the Asia-Pacific region at a ceremony in Marrakesh on Tuesday.

Siddique is a leading scientist in the field of legumes and currently serves as a professor of agriculture and chair and director of the Institute of Agriculture at the University of Western Australia.
As Ambassador for the International Year, Siddique will work to raise awareness on the important contribution of pulses to food security and their positive impact on health and the environment, the Food and Agriculture Organisation (FAO) said in a statement.
Besides encouraging new connections throughout the food chain to better use pulse-based proteins in our food and address trade challenges, Siddique is also tasked with seeking out opportunities for dialogue on these nutritional legumes and efforts to ensure more people have access to information on pulses.
Siddique’s research includes papers on the adaptation of crops to the dryland environment and traits that allow crops to cope with various stresses. He is credited with contributing to Australia’s ascent to become one of the world’s leading pulse exporters and for strengthening the chickpea industry in particular.
Siddique is an International Fellow of the Indian Society of Plant Physiology, a Foreign Fellow of the Indian National Academy of Agricultural Sciences and a fellow of the Australian Agriculture Institute.
Siddique’s designation took place during the opening of the 2016 International Conference on Pulses for Health, Nutrition and Sustainable Agriculture in Drylands. About 300 leading agricultural scientists, policy-makers, donors and representatives of private sector organisations are attending the Marrakesh conference to deliberate and address the challenges facing developing countries in the production of pulses and the widening gap between supply and demand.
The UN has declared 2016 the International Year of Pulses. India is the largest producer, consumer and importer of pulses in the world.

Source : Business Line

Wednesday, April 20, 2016

தென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க! வேளாண் துறையினர் ஆலோசனை

தென்னை மரத்தினை தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை கட்டுபடுத்த வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் வழங்கியுள்ள ஆேலாசனைகள் வருமாறு: இளம், வளரும் பருவத்தில் உள்ள தென்னங்கன்றுகளை காண்டாமிருக வண்டு தாக்கும். இவற்றை எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, வண்டுகள் போன்றவற்றைப் பொறுக்கி அழிக்க வேண்டும். கார்பாரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீல் கரைத்து 3 மாதங்களுக்கு ஒரு முறை எருக்குழியில் தெளிப்பதுடன், வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை ஊற்றி அழிக்கலாம்.

கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைப்பதன் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க முடியும். சிவப்புக் கூன் வண்டு தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டிபிடிக்க இயலாது. வண்டுகள் குருத்துப் பகுதிகளில் முட்டையிட்டு நேரடியாக குருத்தினுள் சென்று திசுக்களை உண்பதால் நடுக்குருத்து வாடி, பின்னர் அனைத்து மட்டைகளும் சரிந்து விடுகின்றன. சில நேரங்களில் தண்டுப்பகுதியில் ஏற்படும் காய்களின் மூலம் உள்சென்று திசுக்களை உண்டு, சிறிய துவாரம் வழியாக வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்கள் மிகுந்த துர்நாற்றத்தை உண்டாக்கும். 

இடி தாக்கிய மரங்கள், கூன்வண்டு தாக்கிய மரங்கள் கடும் பாதிப்பை ஏறுபடுத்தும் வண்டுகளுக்கு வாழ்விடமாக அமைவதால் அந்த மரங்களை அப்புறப்படுத்திட வேண்டும்.கருந்தலைப்புழு தாக்குதலால் கீழ் அடுக்கிலுள்ள மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும், தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தொலைவிலிருந்து பார்க்கும் போது கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும். கருந்தலைப்புழுக்கள் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எடுப்பதுடன், டைக்குளோர்வாஸ் அல்லது மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி அளவில் கலந்து பாதிக்கப்பட்ட இலைகளில் படும் வகையில் தெளிக்கலாம்.

ஈரியோபைட் சிலந்திப்பூச்சி 2 முதல் 6 மாத குரும்பைகளில் உள்ள காம்பின் அடியில் கூட்டமாகச் சேர்ந்து சாற்றை உறிஞ்சுவதால், குரும்பைகள் உதிர்கின்றன. இரண்டு மூன்று மாத குரும்பைகளில் முக்கோண வடிவில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திட்டுகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மரங்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் ஒரு சத மருந்து 5 மில்லி அல்லது வேப்ப எண்ணெய் 30 மில்லி மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்து ஜனவரி, மார்ச், மே மாதங்களில் 2 முதல் 6 மாத குரும்பைகளில் தெளிக்கலாம். தவிர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக்கை மரத்துக்கு 200 மில்லி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 2 முறை வேர் மூலம் செலுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Dinakaran