Tuesday, March 15, 2016

மரத்தின் அடிப்பகுதியில் குலைதள்ளிய வாழை

வடமதுரை:வடமதுரை அருகே வாழை மரம் ஒன்று தண்டின் கீழ் பகுதியிலேயே குலை தள்ளியுள்ளது.
வடமதுரை தென்னம்பட்டியை சேர்ந்த தம்பதி முனியாண்டி, ராஜம்மாள். இவர்கள் வீட்டின் முன்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரஸ்தாளி வாழை மரக்கன்றை நட்டனர். வீட்டு உபயோக நீரினால் வளர்ந்த வாழை மரம் தற்போது பல்கி பெருகி ஏராளமான மரங்களாக மாறியுள்ளன. வழக்கமாக வாழை மரம் உயரமாக வளர்ந்த பின்னர் மேல்பகுதியில் குலை தள்ளும். ஆனால் இங்குள்ள ஒரு மரம் அடிப்பகுதியில் குலை தள்ளியுள்ளது. அக்கம் பக்கத்தார் அதனை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.



Source : Dinamalar

No comments:

Post a Comment