Wednesday, March 9, 2016

கோழித் தீவனத்தில் அமினோ அமிலம் சேர்க்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்



முட்டையின் எடை குறையாமல் இருக்க கோழித் தீவனத்தில் அமினோ அமிலம் சேர்க்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆராய்ச்சி நிலையம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 66 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 38 சதவீதமாகவும் இருக்கும்.

அமினோ அமிலம்

பகல் மற்றும் இரவு வெப்பம் அடுத்த 3 நாட்களுக்கு உயராமல் இருக்கும் என்பதால், கோழிகளில் வெப்ப அயற்சி இருக்காது. இருப்பினும் தற்போது நிலவி வரும் வெப்ப அளவுகள் தீவன எடுப்பை சற்றே குறைக்கும் வாய்ப்பு உள்ளதால் முட்டையின் எடை மற்றும் அதன் வடிவம் மாறுபடலாம்.

எனவே அம்மாற்றங்களை தவிர்க்க தீவனத்தில் தேவையான அளவிற்கு அமினோ அமிலங்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக மித்தியோனின் மற்றும் லைசின் ஆகியவற்றை பயன்படுத்த தொடங்க வேண்டும். இதனால் அமீனோ அமிலங்களின் குறை நீங்கி, முட்டை எடை மற்றும் உற்பத்தி குறையாமல் தடுக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

Source : Dailythanthi

No comments:

Post a Comment