நீடாமங்கலத்திலிருந்து இரண்டாயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக வடசென்னைக்கு சரக்கு ரயிலில் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம் மன்னார்குடி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தொடர்ந்து அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் 150 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் 70 பேர் சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றி அரவைக்காக வடசென்னைக்கு அனுப்பி வைத்தனர். நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.
Source : Dinamani
No comments:
Post a Comment