Monday, March 14, 2016

பருவமாற்ற அறிவியல் கண்காட்சி ரயில் ; நெல்லையில் 16ம் தேதி வரை நிற்கிறது


திருநெல்வேலி : பருவநிலை மாற்ற அறிவியல் கண்காட்சி ரயில் நெல்லையில் வரும் 16ம் தேதி வரையிலும் முகாமிட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையுடன் இணைந்து அறிவியல் கண்காட்சி ரயிலை இயக்கி வருகிறது. 2007 முதல் வெவ்வெறு அறிவியல் கருத்துக்களுடன் இந்தியா முழுவதும் பயணித்துவருகிறது. தற்போது பருவநிலை மாற்றம் குறித்த காட்சிகள் அடங்கிய 16 பெட்டிகளுடன், ரயில் நேற்று திருநெல்வேலி, ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. நெல்லை ரயில்நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள கண்காட்சி ரயில் வரும் 16ம் தேதி மாலை 5 மணி வரையிலும் நெல்லையில் நிற்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.நெல்லை கலெக்டர் கருணாகரன், கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த ரயிலில் ரயிலில் பருவகால மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காடுகள், வன விலங்குகள், பாதுகாக்க வேண்டிய பறவை இனங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகள் குறித்த காட்சிகள் படங்களாகவும், விளக்க காட்சிகளாகவும் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பெர்மி வித்யா, நெல்லை ரயில்நிலைய மேலாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment