கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் கே.எம்.ஏ. நகரை சேர்ந்தவர் சுதாகர். பள்ளி ஆசிரியர். இவர், தன் வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி வாழை மரங்களை வளர்த்து வருகிறார். நான்கு வாழை மரங்கள் ஒன்றையொன்று உரசியபடி பெரிதாக வளர்ந்துள்ளன. அவற்றில், ஒருசில வாழை மரங்கள் குலை தள்ளும் நிலையில் உள்ளன. இதனால் இடநெருக்கடி காரணமாக, நடுவே இருந்த, ஒரு வாழை மரத்தை மட்டும் சுதாகர் அடிவரை வெட்டி விட்டார். வெட்டப்பட்ட தடிமனான அடிப்பகுதியை, தோண்டி எடுக்காமல் அப்படியே விட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அந்த அடிப்பகுதியில், திடீரென குலை தள்ளியுள்ளது. அந்த குலையில், 100க்கும் மேற்பட்ட வாழை காய்கள் உள்ளன. இதையறிந்த அப்பகுதி மக்கள், கூட்டம், கூட்டமாக சுதாகர் வீட்டுக்கு வந்து, வெட்டப்பட்ட வாழை மரம் குலை தள்ளியதை வியப்புடன் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment