Thursday, March 3, 2016

300 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்


காஞ்சிபுரம் மாவட்டத்தில், 300 விவசாயிகளுக்கு, 2.9 கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் காஞ்சிபுரம், மதுராந்தகம், நந்தனம் ஆகிய இடங்களில், வேளாண் பொறியியல் துறை உப கோட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மானிய விலையில், வேளாண் உபகரண கருவிகள் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, ஒவ்வொரு உப கோட்டத்திலும், 200க்கும் மேற்பட்டவர்கள், வேளாண் உபகரணங்கள் கேட்டு, விண்ணப்பம் செய்திருந்தனர். அதன்படி, விசை உழுவை இயந்திரம், டிராக்டர், சுழல் கலப்பை, மினி டிராக்டர், மருந்து தெளிக்கும் கருவி, விதை விதைப்பான் கருவி போன்றவற்றை, 300 விவசாயிகளுக்கு, 2.9 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வேளாண் கருவிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, பல காரணங்களால் தாமதம் ஆனது. பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இன்னும் சில நாட்களில் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
- ராமனாதன் , செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை


Source : Dinamalar

No comments:

Post a Comment