நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கான தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் நடவடிக்கை மார்ச் 14 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் நிகழ் பருவ நெல் கொள்முதலுக்காக 283 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் இதுவரை 2,56,802 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இடைத் தரகர்கள், வியாபாரிகள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாநில நெல் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், நெல்லுக்கான விற்பனைத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் நடவடிக்கை மார்ச் 14-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment