திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டுவரும் மண்விண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து துறையூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினருடன் கலந்தாய்வு நடைபெற்றது. கூட்டத்தில் சென்னைவேளாண்மைவிற்பனைமற்றும் வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை இணை இயக்குனர் க.இளங்கோ கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உறுப்பினர்களுக்குலாபம் ஈட்டித் தருகின்றவகையில் செயல்படவேண்டும். பயிர் சாகுபடிசெய்யும் விவசாயிகள்,விற்பனையாளராக மாறவேண்டும், 2015-16-ல், 6 இடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.துறையூர் மண்விண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலமாக,சீரகசம்பாநெற்பயிர் சாகுபடிசெய்யப்பட்டு,சீரகசம்பாநெல் கொள்முதல் செய்யப்படுதல் குறித்து, நிறுவனத்தின் பொதுச் செயலாளர் தொல்காப்பியன் எடுத்துரைத்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாவட்டவேளாண்மைதுணை இயக்குனர் (வேளாண் வணிகம்) என்.சர்புதீன்,மண்விண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ரங்கராஜன்,முசிறிவேளாண் வணிகத்திட்டவேளாண்மைஅலுவலர் புஷ்பாசிவகுமார்,உதவிவேளாண்மைஅலுவலர்கள் சரவணன்,சிவபெருமாள், நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் துறையூர் பகுதிமுன்னோடிவிவசாயிகள் கலந்து கொண்டனர்.
Source : Dailythanthi
No comments:
Post a Comment