க.பரமத்தி பகுதியில் சூரியகாந்தி சாகுபடி அமோகமாக விளைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
க.பரமத்தி யூனியன், ஆரியூர், குப்பம், அத்திப்பாளையம், தென்னிலை கிழக்கு, கோடந்தூர், மொஞ்சனூர், நெடுங்கூர், காருடையாம்பாளையம், பவுத்திரம், புன்னம், அஞ்சூர், கார்வழி உள்பட, 30 பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதி, பெரும்பாலும் மானாவாரி விவசாயத்தை நம்பி நிலக்கடலை, சூரியகாந்தி, எள், கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை சராசரி மழையளவை விட அதிகமாக பெய்துள்ளதால், விவசாய கிணறுகள் மற்றும் குளம் குட்டைகள் நிரம்பி, கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதை நம்பி க.பரமத்தி யூனியன் பகுதியில் நிலக்கடலை, ஆமணக்கு, எள், சூரியகாந்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், சூரியகாந்தி சாகுபடி மட்டும் அமோக விளைச்சல் விளைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment