Thursday, March 10, 2016

மாற்றுபயிர் சாகுபடியில் நல்ல மகசூல்: கோபியில் சூரியகாந்தி சாகுபடி ஜோர்


நல்ல மகசூல் கிடைப்பதால், கோபி பகுதி விவசாயிகள் மாற்றுப்பயிராக சூரியகாந்தி சாகுபடிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறை, நீர் நிர்வாகம் உள்ளிட்ட பிரச்னைகளால், விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறும் யுக்தியை கோபி பகுதி விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். அதன்படி, புஞ்சை துறையம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மாதேஸ்வரன், சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளார். அவர் கூறியதாவது: எண்ணெய் வித்து பயிர்களில், நல்ல மகசூல் தரும் சாகுபடியாக சூரியகாந்தி சாகுபடி உள்ளது. ஏக்கருக்கு இரண்டு கிலோ சூரியகாந்தி விதைக்க வேண்டும். விதைத்த, 120 நாளில் பூ அறுவடைக்கு வந்து விடும். பூவை மிஷினில் கொடுத்து அடித்தால், எண்ணெய் வித்துக்கான விதை கிடைக்கும். ஏக்கருக்கு இரண்டு டன் விதைகள் மகசூல் கிடைக்கிறது. வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். சூரியகாந்தி செடியை சாகுபடி செய்தால், அடுத்த மஞ்சள் சாகுபடிக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

source : Dinamalar

No comments:

Post a Comment