Tuesday, March 15, 2016

1,226 டன் யூரியா தஞ்சை வந்தது

சென்னையில் இருந்து 1,226 டன் யூரியா உரம் தனியார் உரக்கடைகளுக்கு விநியோகம் செய்ய நேற்று தஞ்சைக்கு வந்தது. சென்னையில் இருந்து 22 வேகன்களில் 1,226 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை ரயில் நிலையம் வந்தது. இந்த உரங்கள் அனைத்தும் ரயில் வேகன்களில் இருந்து இறக்கப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர்  உர மூட்டைகள் அனைத்தும் தஞ்சையில் உள்ள தனியார் உரக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Source : Dinakaran

No comments:

Post a Comment