சிவகாசி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு சிவகாசி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் கோ.பத்மாவதி தலைமை வகித்தார். நெற்பயிரை தாக்கும் பூச்சிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும் முறைகள் குறித்து பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சசிகுமார் படவிளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.நெற்பயிரை தாக்கும் நோய்கள், பயிர் மேலாண்மை குறித்து பயிர் நோயியல் துறைப் பேராசிரியர் விமலா பயிற்சி அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேற்பார்வையாளர் லதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப உதவி மேற்பார்வையாளர் சதீஸ்குமார் செய்திருந்தார்.
Source : Dinamani
No comments:
Post a Comment