Wednesday, January 6, 2016

வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 8-இல் உழவர் தின விழா


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2016-ஆம் ஆண்டுக்கான உழவர் தின விழா வரும் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உழவர் தின விழா, கருத்துக் காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டுக்கான உழவர் தின விழா பட்டமளிப்பு விழா
அரங்கில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8)  நடைபெறுகிறது. 
இதன் ஒரு பகுதியாக சுமார் 60 அரங்குகள் கொண்ட கண்காட்சி நடைபெறுகிறது. இதில், வேளாண் பல்கலை.யில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தோட்டக்கலை, வேளாண் சார்ந்த பயிர் ரகங்கள், வேளாண் கருவிகள், நவீன இயந்திரங்கள், இதர தொழில்நுட்பங்கள் ஆகியவை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்படும்.
அத்துடன், வேளாண் தொழில் முனைவோர், முன்னோடி விவசாயிகளின் கண்டுபிடிப்புகள், தனியார் நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்ளடங்கிய நவீன கண்டுபிடிப்புகளும் இடம்பெறும். அதேபோல், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை சார்ந்த அரசுத் துறைகளின் பல்வேறு விதமான திட்டங்கள், அதன் பயன்கள், பயனாளிகளின் விவரங்களும் இடம் பெறுகின்றன.
உழவர் தின விழாவின்போது, விவசாயிகளின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட 5 விவசாயிகளுக்கு வேளாண் விருது வழங்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் சார்பில் சுமார் 5 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கின்றனர் என பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment