Tuesday, January 5, 2016

நிலக்கடலைக்கு ஜிப்சம் உரம் அவசியம் வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற ஜிப்சம் உரம் அவசியம் இட வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தற்போது  சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிரில் அதிக மகசூல்பெற ஜிப்சம் இடுவது அவசியம். ஒரு எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம் இடுவது மிகவும் அவசியம். ஜிப்சம் இடும்போது 200 கிலோவை அடி உரமாகவும், மீதமுள்ள 200 கிலோவை 40 - 45 வது நாளில் பூக்கும் தருணத்தில் இட்டு களைகொத்தி பயிரைச்சுற்றி நன்கு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் அடி உரமாக இடுவதால் பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற நோய்களை வெகுவாக குறைக்க முடியும். பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் ஜிப்ஸம் இட்டு களை கொத்தி மண் அணைப்பதால் கால்சியம் மற்றும் கந்தக சத்து குறைபாடுள்ள நிலங்களில் நல்ல பலன் கிடைக்கும். ஜிப்சம் இடுவதால் நன்கு விழுதுகள் இறங்கி பொக்கற்ற நல்ல எடையுடன் கூடிய திரட்சியான நிலக்கடை பருப்புகள் கிடைக்கும். அதிக மகசூலும் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment