உடுமலை பகுதியில் கொத்தமல்லி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடுமலையை அடுத்துள்ள வாளவாடி, அந்தியூர், வடபூதனத்தம், குருஞ்சேரி,கொங்கல்நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இது 2 மாத பயிராகும். ஏக்கருக்கு ரூ.15ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். செடிகளில் கொத்துக்,கொத்தாக பூக்கள் பூத்துள்ளன. இதனால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 40 கிலோ எடையில் 13 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். ஒரு மூட்டை கொத்தமல்லி விலை ரூ.3500. எனவே இந்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்னனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment