ஆத்தூர் பகுதியில் கம்பு விளைச்சல் அதிகரித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுதானிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
பாசனத்திற்கு அதிக நீர் தேவையில்லை என்பதால், சிறுதானிய பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிகபட்சமாக மக்காச்சோளம் 38 ஹெக்டேரிலும், சோளம் 20ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சுமார் 800 ஹெக்டேரில் கம்பு பயிரிடப்பட்டுள்ளது. இதர சிறுதானியங்களான கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி ஆகியவை குறைந்த அளவில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
ஆத்தூர்,ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு இப்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.அடுத்த 10 நாள்களில் அறுவடைப் பணிகள் தொடங்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆத்தூர், முன்னிலைக்கோட்டை, பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, ஆரியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 2ஆவது சாகுபடியை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment