கறவைமாடு வளர்ப்பில் லாபம் பெற ஆண்டுக்கு ஒரு கன்று உற்பத்தி என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இப்பயிற்சி முகாமில் கறவை மாடுகளில் சினைப் பருவ அறிகுறிகள், கனநீர் மாறுபாடுகள், நோய்க் கிருமிகளின் தாக்குதல் மற்றும் தீவனக் குறைபாடுகளால் ஏற்படும் தாற்காலிக மலட்டுத் தன்மை குறித்தும் நிரந்தர மலட்டுத் தன்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சினைப்பருவ அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது மற்றும் சினைப் பருவத்துக்கு வராத மாடுகளை சினைப் பருவத்திற்கு வரவைப்பது மற்றும் ஆண்டுக்கு ஒரு கன்றினைப் பெற்று லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும். இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266244 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 7-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Source : Dinamani
No comments:
Post a Comment