திருமானூரில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி அழகுகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் திட்டத்தின்படி இந்த வாரம் வாழ்க விவசாயி, வாழ்க விஞ்ஞானம் என்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (23ம் தேதி) அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவி கிராமத்தில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து திருமானூர் ஒன்றியம் பாக்கியநாதபுரம் தூய ஜெபஸ்தியார் ஆலயத்தில் உழவர்களுக்கு உதவும் உன்னத தொழில்நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கு நடக்க உள்ளது.இக்கருத்தரங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு அலுவலர்கள் கலந்துரையாட உள்ளனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment