Monday, December 28, 2015

"அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி


நிலக்கோட்டை வட்டாரத்தில் உள்ள விளாம்பட்டியில் நெல் பயிரில் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளியின் 2ஆவது வகுப்பு விவசாயி சிவக்குமார் வயலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இப்பண்ணைப் பள்ளிக்கு திண்டுக்கல் வேளாண்மை துணை இயக்குநர் தவமுனி தலைமை வகித்தார். அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளரான நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் மு.முருகன் முன்னிலை வகித்தார். இதில் இயந்திர நடவு மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.  பின்னர் விவசாயிகளுக்கு இயந்திரம் மூலம் நெல் நடவு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர் ஐ.சிங்கத்துரை மற்றும் அட்மா திட்ட உதவி மேலாளர்கள் ஜெயசுப்பிரமணி, சோபியாபிரேமாஆகியோர் செய்திருந்தனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment