திருவையாறு அருகே விளாங்குடியில் நடந்த எள் மற்றும் நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாமில் 40 விவசாயிகள் பயன்பெற்றனர். திருவையாறு வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அட்மா 2015 -2016 திட்டத்தின்கீழ் விளாங்குடி கிராமத்தில் எள் மற்றும் நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது, 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வேளாண்மை இணை இயக்குனர் கலியமூர்த்தி எள் மற்றும் நிலக்கடலையில் உழவியல் முறைகள், விதை நேர்த்தி, பயிர் பாதுகாப்பு முறைகள், அறுவடைக்கு பின் செய் நேர்த்தி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் பாலமுருகன், சந்திரசேகரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மாதாலட்சுமி, உதவி வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் பிறைசூடி, வெங்கடேசன் ஆகியோர் செய்தனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment