Monday, December 28, 2015

காடையாம்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்



ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஒன்றியத்தில் பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தாராபுரம், கொங்குபட்டி, காருவள்ளி, மூக்கனூர்,குண்டுகல், டேனிஸ்பேட்டை, நடுப்பட்டி, கொங்காரப்பட்டி, கணவாய்புதூர் உள்பட ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் சாமந்தி, சாந்தினி, கோழிக்கொண்டை, நாட்டு சாமந்தி, வைலட், மஞ்சள் பூர்ணிமா, வெள்ளை பேப்பர் ஒயிட், ராஜமலர் ஆகிய பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதங்களில் பெய்த பருவ மழையினால் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பூ வேர்கள் அழுகியது. இதனால் பூக்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் பரப்பு குறைந்தது. ஆனால் தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் பூவுக்கு நல்ல விலை கிடைக்கின்றது. இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட பூக்களை விவசாயிகள் பூசாரிபட்டி பூ மார்கெட்டுக்கும் சேலம் பூ மார்க்கெட்டுக்கும், பெங்களூருக்கும் அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். பூசாரிபட்டி மார்க்கெட்டில் வாங்கப்படும் பூக்களை வியாபாரிகள் தஞ்சாவூர், பட்டுகோட்டை, கும்பகோணம், திருச்சி, கடலூர், சென்னை, மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். 

Source : Dailythanthi

No comments:

Post a Comment