ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பு கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் நடத்தப்படும் கண்காட்சி வெள்ளிக்கிழமை (டிச.25) தொடங்குகிறது.
இக்கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் ஐந்திணை மரபணுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் மாவட்டத்திலேயே முதன்முதலாக தோட்டக்கலைக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தொடங்கும் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகிக்கிறார். மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் கண்காட்சியை திறந்துவைத்துப் பேசுகிறார்.
Source : Dinamani
No comments:
Post a Comment