Friday, December 25, 2015

வேளாண் பொறியில் துறை சார்பில் மானிய விலையில் நெல் நடவு இயந்திரம்


வேளாண் பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் பண்ணைக் கருவிகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி:
 தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், விவசாயத்திற்கான நவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
 நிகழாண்டுக்கு, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிலக்கடலை, மக்காச்சோளம், சூரியகாந்தி, கம்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களின் விதைகளை விதைப்பதற்கான கருவி மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
 அதேபோல், நெல் நாற்றுநடும் இயந்திரம் (8 வரிசைக்கும் கூடுதலாக) மற்றும் பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட கருவிகளும் உள்ளன. இந்த கருவிகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் விவசாயிகள், அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
 திண்டுக்கல் உதவி செயற்பொறியாளரை 0451-2423758 என்ற எண்ணிலும், பழனி உதவி செயற்பொறியாளரை 04545-245602 என்ற எண்ணிலும், கொடைக்கானலுக்கு 04542-245376 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Source : dinamani

No comments:

Post a Comment