சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி பனை மர விதைகள் நடும் விழா நடைபெறவுள்ளது.
பனை மரம் அழிவின் விளிம்பில் உள்ளதால் அதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர்கள் சார்பில் இவ்விழா நடைபெறுகிறது. தண்டுக்காரம்பாளையம் குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பனை மர விதைகள் கடந்த வாரம் நடவு செய்யப்பட்டன. இந்நிலையில், தண்டுக்காரம்பாளையம் பள்ளி மைதானத்தில் பனை மர விதைகள் நடும் விழா டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், அப்பகுதியைச் சுற்றியுள்ள குளங்கள் உள்ளிட்டவற்றில் 12 ஆயிரம் பனை மர விதைகள், வில்வம், அரசு, இச்சி, வேம்பு ஆகிய மரக் கன்றுகளும் நடப்படவுள்ளன. இதில், இயற்கை வளம் குறித்து கருத்தரங்கு, விருந்து உபசரிப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் பங்கேற்குமாறு தண்டுக்காரம்பாளையத்தில் வீடு வீடாகச் சென்று வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம், பனை மர விதை உள்ளிட்ட தாம்பூலத் தட்டுடன் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment