மதுரை வேளாண் அறிவியல் மையம் சார்பில் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வேளாண் விஞ்ஞானிகளும் விவசாயிகளும் நேரடியாக சந்தித்து தங்கள் நவீன வேளாண் யுக்திகள் குறித்து விளக்கங்கள் பெறலாம்.
இதேபோல அலங்காநல்லூர் அருகே உள்ள தாதகவுண்டன்பட்டியில் பழமரங்களின் அடர்நடவு முறை குறித்த செயல்விளக்கம் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு மதுரை வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மைய முதல்வர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment