சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டிசம்பர் 26,27ஆம் தேதிகளில் கறவைப் பசுக்கள், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கான மருத்துவப் பரிசோதனை, குடற்புழு நீக்க முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கறவைப் பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்கவும், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் எடையை அதிகரிக்கவும் தமிழகம் முழுவதும் இம்மாதம் 26,27ஆம் தேதிகளில் கறவைப் பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனையும், வெள்ளாடு,செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
Source : Dinamani
No comments:
Post a Comment