நாகை மாவட்டத்தில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்ய நாளை கடைசி நாளாகும். தேசிய வேளாண் பயிர் காப்பீடு நிறுவனத்தின் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் நடைமுறை படுத்தப்படும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு 2015-16ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு பிரிமிய தொகையாக ஏக்கருக்கு சிறு குறு விவசாயிகள் ரூ.134, இதர விவசாயிகள் ரூ.149 பிரிமிய தொகையாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான பிரிமிய தொகை செலுத்த நாளை (31ம் தேதி) கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்வது தொடர்பாக உரிய ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்று தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்ககளில் தவறாமல் பயிர் காப்பீடு செய்து இயற்கை சீற்றங்களால் பயிருக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment