திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 29) நடைபெறவுள்ளது.
திருப்பூர் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி, அவிநாசி ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகத் தெரிவித்து, தீர்வுகாணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment