Monday, December 28, 2015

உருளைக்கிழங்கில் தரமான விதை விவசாயிகளுக்கு மூன்று நாள் பயிற்சி


ஊட்டி முத்தோரையில் உள்ள மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், உருளைக் கிழங்கில் தரமான விதை உற்பத்தி மற்றும் சேமிப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் வெங்கடாசலம் வரவேற்று பேசுகையில்,“உருளைக் கிழங்கு சாகுபடியை பொறுத்தவரை, மாவட்டத்தில் தரமான விதைக் கிழங்கை பெறுவது, மிக பெரிய பிரச்னையாக உள்ளது. விதை சேமிப்பு குறித்த தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளாததால், விவசாயிகள், விதைகளை சேமித்து வைப்பதில்லை. எனவே முறையான விதைக் கிழங்கு சேமிப்பு தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் மணி தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வத்தார். இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு, ஆராய்ச்சி மைய தலைவர் கோலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட பயிற்சி விளக்க கையேடு வெளியிடப்பட்டது.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில், மேல் கவுஹட்டி, கெந்தொரை, மடித்தொரை மற்றும் குந்தசப்பை பகுதிளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சுதா, ஆர்த்தி பைரவா, திவ்யா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


Source : Dinamalar

No comments:

Post a Comment