திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச. 31-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிச. 31-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதி நிதிகள் பங்கேற்று, நிறைகுறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment