பரமக்குடியில் ஆந்திர மாநில பழவகை, மலர் செடிகள், குரோட்டன்ஸ் செடிகள் விற்பனைக்கு வந்துள்ளது.அவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் ஒட்டுரக பழவகை, மலர், குரோட்டன்ஸ் செடிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை குறுகிய காலத்திலேயே அதிக பலன் தருகிறது. இதனால் அவற்றிற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு உள்ளது. தற்போது தமிழகத்தில் செடிகள் நடுவதற்கான சீசன் துவங்கியுள்ளது. இதனால் பழ வகை, மலர் செடிகளை ஆந்திர விவசாயிகள் விற்பனைக்காக பரமக்குடி கொண்டு வந்துள்ளனர். இவற்றில் 6 மாதத்தில் காய்க்கும் ஒட்டுரக எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா செடிகளை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மேலும் மாடி தோட்டத்திற்காக மல்லிகை, முல்லை, ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளும் அதிகளவில் விற்பனையாகின்றன. ஆந்திர விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் 5 நாட்கள் தங்கி விற்பனை செய்கிறோம். 100 க்கும் மேற்பட்ட செடி, கொடி ரகங்கள் உள்ளன. முக்கியமாக ஒட்டு ரக எலுமிச்சை போன்ற பழவகை செடிகள் ஒரு அடி உயரம் வளர்ந்ததும் காய்க்க துவங்கும். ஆந்திரா மற்றும் தமிழக மண்வளம் ஒரே சீராக உள்ளதால், இச்செடிகள் எளிதில் வளர்ந்து விடும். செடிகளை ரூ. 60 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்கிறோம். தோட்டம் அமைப்பவர்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்கப்படும், என்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment