Wednesday, December 23, 2015

பஞ்சகவ்யா தயாரிப்பது எப்படி?

இன்று தமிழ்நாட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவர் திருமதி.சாந்தஷீலா நாயர் முதல், த.நா.விவசாய பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் ராமசாமி வரை மட்டுமல்ல, ஸ்பிக் போன்ற இரசாயன உரத் தயாரிப்பாளர்கள் கூட இயற்கை வழி விவசாயம் பற்றி பேசத் தொடங்கி விட்டனர். ஸ்பிக் நிறுவனம் 3 வகை இயற்கை உரங்களை விற்பனைக்கு அனுப்பத் தொடங்கி விட்டது.
இந்நிலையில் “பஞ்சகவ்யா” பற்றி எங்கும் பரபரப்பாக பேசுகின்றனர். பஞ்சகவ்யா என்றால் என்ன? டாக்டர் கோ.நம்மாழ்வார் தினம் தினம் பேசினாரே இந்த பஞ்சககவ்யா பற்றி அறிவோம். இதை தயாரிக்க மாட்டுச் சாணம் 3 கி, மாட்டு சிறுநீர் (கோமியம்) 3லி, பால் 2லி, தயிர் 2லி, நாட்டு சர்க்கரை 1கி, (கரும்புசாறு2லி கூட பயன்படுத்தலாம்) வாழைப்பழம்12, இளநீர் 2லி, ஈஸ்ட்100கி, கடலை பிண்ணாக்கு1கி. பிண்ணாக்கை ஊற வைத்து அனைத்து பொருட்களையும் மண் பானை / வாளியில் கலந்து, துணியால் மூடி நிழலில் வைக்க வேண்டும். தினம் கலக்கி விட்டால் நுண்ணுயிர்கள் பெருகும். இதன் மூலம் 30 லி பஞ்சகவ்யா கிடைக்கும். 10 லிட்டர் நீரில் 300 மில்லி கலந்து தெளிக்கலாம். பயிர்கள் சிறப்பாக வளரும்.
6 மாதம் வரை இதை பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு 30 லி பஞ்சகவ்யாவுடன் 200 லி அமுதக் கரைசல் பாசன நீருடன் கலந்து 
விடலாம். இதை பயன்படுத்த மண் வளம் கூடும். பூக்கள் அதிகமாகும். அதிக லாபம் கிடைக்கும். www.vanagam.comwww.tnau.ac.in பாருங்கள்.
-எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர், 93807 55629

Source : Dinamalar

No comments:

Post a Comment