Tuesday, December 29, 2015

நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்


திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்  கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 31) நடைபெறவுள்ளது. திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள புதிய மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தின் தரைத்தளத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.இதில், திருப்பூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பங்கேற்று விவசாயிகளிடம் இருந்து மனுக்களைப் பெறவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment