சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இரண்டாம் பசுமை புரட்சியில் இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற குறிக்கோளின்படி குறைந்த அளவு பாசன நீரைக் கொண்டு கூடுதல் பரப்பில் சாகுபடி மேற்கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. நீர்நிலைகளில் தற்போது பாசனநீர் குறைந்த அளவே கிடைக்கிறது. பாசனநீர் மேலாண்மையில் நுண்ணீர்பாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சொட்டுநீர்பாசனம், தெளிப்புநீர்பாசனம் அமைக்க மத்திய மாநில அரசுகள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில நடப்பாண்டில் நுண்ணீர் பாசனத் திட்டம் (பிரதம மந்திரி கிரிஷ் சஞ்சய்யோஜனா) திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் நுண்ணீர் பாசனம் அமைக்க 855 எக்டர் பரப்பிற்கு ரூ.4.79 கோடி நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. 574 எக்டர் பரப்பிற்கு ரூ.3.63 கோடி நிதி குறியீட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டுள்ளன. இதில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100சத மானியத்திற்கு குறைந்தது ஒரு எக்டர் பரப்பிற்கு ரூ.23 ஆயிரத்து 500 மானியம், அதிகபட்சம் 2 எக்டருக்கு வழங்கப்பட உள்ளது.
இதர விவசாயிகளுக்கு 75சத மானியத்திற்கு கரூர் மாவட்டத்திற்கு 144 எக்டருக்கு ரூ.90.84லட்சம் மானியம் நிதி குறியீடு பெறப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் ஒரு எக்டருக்கு ரூ.17625 மானியமும் அதிகபட்சமாக 5 எக்டருக்கும் மானியம் வழங்கப்படும். இதேபோல நடப்பாண்டிற்கு தெளிப்பு நீர் பாசனத்திற்கு சிறு,குறு விவசாயிகளுக்கு 100சத மானியத்திற்கு 110எக்டருக்கு மானியமாக ரூ.20.33 லட்சமும் நிதிகுறியீடு பெறப்பட்டுள்ளது. எக்டருக்கு மானியம் ரூ.31600 இதர விவசாயிகளுக்கு 47 சதவீத மானியத்திற்கு 28 எக்டருக்கு மானியமாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சமாக ஒருஎக்டருக்கு ரூ.23700 மானியம் வழங்கப்படும். வழக்கம்போல் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒருஎக்டர் முதல் 2எக்டர் மானியம் இதரவிவசாயிகளுக்கு 5எக்டர் வரையும் மானியம் வழங்கப்படவுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வறட்சிக்கு இலக்காகும் வட்டாரங்களான அரவக்குறிச்சி, க.பரமத்திக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திற்கு மத்தியஅரசு 50 சதவீத தொகையும், தமிழக அரசு 50சதவீத தொகையும் வழங்குகிறது. இதர விவசாயிகளுக்கு 75சத மானியத்திற்கு மத்தியஅரசு 35சதவீதம், தமிழகஅரசு 40 சதவீதமும் வழங்குகிறது.
கரூர், தாந்தோணி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகமலை, கடவூர் ஆகிய 6 வட்டாரங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திற்கு மத்தியஅரசு 35சதம், தமிழகஅரசு 65சதமும் மானியம் வழங்குகிறது. இதரவிவசாயிகளுக்கு 75 சத மானியத்திற்கு மத்தியஅரசு 25 சதம் தமிழகஅரசு 50 சதம் வழங்குகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள் காய்கறிபயிர்கள், பூக்கள் மூலிகை பயிர்கள், தென்னையில் ஊடுபயிராக கொக்கோவிற்கு சொட்டுநீர்பாசனம் மற்றும் தெளிப்புநீர்பாசனம் அமைக்க கீழ்கண்ட ஆவணங்களுடன் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகி பயன்பெறலாம்.
சிட்டா அடங்கல், வரைபடம்(வருவாய்த்துறை மூலம்), குடும்ப அடையாளஅட்டை, ஆதார்அட்டைநகல், பாஸ்போர்ட் போட்டோ 4, சிறுகுறு விவசாயி எனில் சிறு குறு விவசாயி சான்று(வட்டாட்சியர் அளவில் கையொப்பம் பெற வேண்டும்), மண் மற்றும் பாசனநீர் மாதிரி ஆய்வு முடிவுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : dinakaran

No comments:
Post a Comment