பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரைக் கட்டுப்படுத்த உயர் மனைகளில் படுதா கட்ட வேண்டும் என, கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். வெப்ப அளவு குறைந்தும், பனியின் அளவு அதிகரித்தும் இருப்பதால், கோழிகளின் தீவன எடுப்பு உயரும். தீவனத்தில் எரிசக்தியின் அளவை உயர்த்துவதால் மட்டுமே தீவன எடுப்பைக் கட்டுப்படுத்த இயலாது. உயர் மனைகளில் பக்கவாட்டில் 3 அடி உயரத்துக்கு படுதாவைக் கட்ட வேண்டும். இது அதிக குளிர் கோழிகளின் மேல் நேரடியாகப் படுவதைத் தடுத்து அதிக தீவன எடுப்பைக் கட்டுப்படுத்த உதவும்.
கோழியின நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் குடல்புண், இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கிளாஸ்ட்டியம் கிருமியின் தாக்கம் உள்ளதா என, ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment