Wednesday, December 16, 2015

ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி :

தென்னிலை தெற்கு மற்றும் கிழக்கு பஞ்சாயத்து பகுதிகளில், தமிழக அரசின் விலையில்லா செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்ட, 133 பயனாளிகளுக்கு கால்நடை துறை சார்பாக, ஆடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் தென்னிலையில் நடந்தது. உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கரூர் மண்டல இணை இயக்குனர் பழனிவேல் முகாமை துவக்கி வைத்தார். விழாவில், கால்நடை பல்கலைக்கழக பேராசிரியை பாரதி பயனாளிகளுக்கு பயிற்சி வழங்கி பேசுகையில்,''ஒவ்வொரு பயனாளிக்கும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின்படி, மூன்று பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் வழங்கப்படுகிறது. ஆடுகளை முறையாக பராமரிக்க சத்தான பொருள்களை தீவனமாக வழங்க வேண்டும். நோய்களில் இருந்து ஆடுகளை பாதுகாக்க கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆடுகள் ஈனும் குட்டிகளை வளர்த்து அதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்,'' என்றார். உதவி மருத்துவர்கள் மோகன்ராஜ், கலைவாணி, தென்னிலை கிழக்கு பஞ்., தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment