Wednesday, December 16, 2015

நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


கொட்டையூரில் உள்ள, நெல் பண்ணை பள்ளி மூலம், நெல் சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடம்பத்துார் ஒன்றியம், கொட்டையூர், நரசமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 645 ஏக்கரில், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
அப்பகுதி விவசாயிகளுக்காக, கொட்டையூரில், 'அட்மா' திட்டத்தின் கீழ், நெல் பண்ணை பள்ளியில், நெல் சாகுபடி குறித்த, ஆறு வார கால பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
அதில், கடம்பத்துார் வேளாண்மை உதவி இயக்குனர் கலாதேவி, உதவி வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு நெல் சாகுபடி செய்வது குறித்து, பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில், மண் மாதிரி எடுத்தல், மண் வளத்தை பாதுகாத்தல், நெற் பயிர்களுக்கு தேவையான உரங்களை எவ்வாறு கலப்பது என, நெல் சாகுபடி குறித்த பல்வேறு விளக்கங்களை செய்முறை பயிற்சி மூலம் எடுத்துரைத்தனர். இதில், 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், வரும் 21ம் தேதி, இயந்திர நடவு மூலம் நெற்பயிர் செய்வது குறித்த செயல் முறை பயிற்சி நடைபெற உள்ளதாக, வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.


Source : dinamalar

No comments:

Post a Comment