நாட்டுக்கோழி பண்ணைகள் அதிக லாபத்தில் இயங்க வேண்டுமென்றால் நோய் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். உயிர் பாதுகாப்பு முறையான நோய் பாதுகாப்புகளை குறைத்து அதன் மூலம் அதிக லாபத்தை உண்டாக்கும் முறையாகும். இதற்கு நோய் கிளர்ச்சி மற்றும் நோயினால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தி பண்ணையில் வேலை செய்பவர்கள் அனைவரையும் கை,கால்களை நன்கு கழுவிய பின் பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்.
பண்ணையில் திடீர் நோய் தாக்குதல் ஏற்பட்டால் முதலில், இறந்த கோழிகளை மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீரில் கிருமி நீக்க மருந்தை கலந்து நாட்டு கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். பண்ணை முழுவதும் கிருமி நாசினியை தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பண்ணையில் பணிபுரியும் வேலையாட்களை, இதர நோயுற்ற பண்ணைகளில் பணிபுரிய அனுமதிக்க கூடாது. அயர்ச்சியை நீக்கும் உயிர்சத்து ஈ மற்றும் சி போன்றவற்றினை நாட்டு கோழிகளுக்கு அதிகளவில் வழங்க வேண்டும். பழைய ஆழ்கூளத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
பண்ணையில் எலி தொல்லை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். நோய்க்கான தகுந்த காரணத்தை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை நோய் எதிர்ப்பு திறனை அறிந்து தகுந்த தடுப்பூசி அளிக்க வேண்டும். கோழிக்குஞ்சுகள் பண்ணைக்கு வரும் முன் புதிய பண்ணையாக இருந்தால் சுத்தம் செய்து கற்சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்க வேண்டும். பழைய பண்ணையாக இருந்தால் கோழிகளை விற்பனை செய்த பின் எருவை எடுப்பதற்கு முன் பண்ணையின் உட்புரம் மற்றும் வெளிப்புரங்களில் பூச்சிக்கொல்லி மருந்தினை பரிந்துரைத்த அளவில் அடிப்பதால் பூச்சிகள் அழிக்கப்படும்.
Source : dinakaran

No comments:
Post a Comment