Tuesday, December 22, 2015

புரதசத்து பற்றாக்குறையை போக்கிட பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யுங்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை

புரதச்சத்து பற்றாக்குறையை போக்கிட அதிக பரப்பில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனை:  புரத சத்து பற்றாக்குறையை போக்கிட உளுந்து, பச்சை பயறு, துவரை போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்க வேண்டும். இவ்வகை பயிர்களை தனிப்பயிராகவோ, பிற பயிர்களுடன் ஊடு பயிராகவோ, கலப்பு பயிராகவோ, வரப்பு பயிராகவோ பயிரிட்டு மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டும். சராசரியாக நாளொன்றுக்கு தனிமனிதன் ஒருவருக்கு 85 கிராம் புரத சத்து தேவைப்படுகிறது. இந்த சத்து உளுந்து, பாசி பயறு, துவரை, தட்டை பயறு, மொச்சை, கொண்டக் கடலை, பட்டாணி, போன்ற பயறு வகை பயிர்கள் மட்டுமே கொடுக்கிறது. நாளொன்றுக்கு தற்போது 36.5 கிராம் புரத சத்து மட்டுமே நமக்கு கிடைக்கிறது. 48.5 கிராம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இக்குறையினை போக்கிட பயறு வகை பயிர்களை அதிகம் சாகுபடி செய்ய வேண்டும்.  என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment