திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தென்னை மரம் ஏறும் 6 நாள் பயிற்சி முகாமின் நிறைவு நாளான சனிக்கிழமை, தென்னை மரம் ஏறும் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்திய தென்னை வளர்ச்சி வாரியம், திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் ஆகியன இணைந்து, இந்த பயிற்சி முகாமை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இயக்குநர்கள் ஜெயமாணிக்கம், முகமதுஅலி, சீனிவாசன், லிங்கையா, பெருமாள், வேணுகோபால் மற்றும் பள்ளி நிர்வாகி சலீம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில், இப்பயிற்சி பெற்ற விவசாயத் தொழிலாளர்கள் 40 பேருக்கு, இலவசமாக ரூ.4000 மதிப்புள்ள தென்னை மரம் ஏறும் கருவிகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Source : Dinamani
No comments:
Post a Comment