திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மழைக்காலங்களில் மல்பெரி செடிகளை தாக்கும் நோய்களை கட்டுபடுத்த பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரமேஷ் ஆலோசனை வழங்கினார்.
அவர் கூறியதாவது: மழைக் காலங்களில் மல்பெரி செடிகளை இலைப்புள்ளி, சாம்பல் நோய், இலைத்துரு மற்றும் இலை கருகல் நோய் அதிக அளவில் தாக்குகின்றன. விவசாயிகள் இந்நோய்களை கட்டுபடுத்த வேண்டும்.
இலைப்புள்ளி நோய் தாக்குதல் உள்ள செடிகளின் இலையில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும். பின்னர் புள்ளிகள் பெரிதாகி இலையில் ஓட்டை ஏற்படும். இதனை தடுக்கபெவிஸ்டினை 0.1 சதவிதம் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். சாம்பல் நோய் மழை மற்றும் குளிர் காலத்தில் தாக்கும். இந்நோய் தாக்கிய இலைகளின் மீது சாம்பல் நிற மாவு போன்ற துகள்கள் காணப்படும். இதனை தடுக்க 0.2 சதவிதம் காரத்தேன், இன்டோபில் பூஞ்சாணக் கொல்லியை தெளிக்க வேண்டும்.
இலைத்துரு நோய் பனிக்காலத்தில் அதிகம் தாக்கும். நோய் தாக்கிய பழுப்பு நிற, வட்டமான சிவப்பு நிற புள்ளிகள் இலையில் அடியிலும் மேல்பாகத்திலும் தென்படும், பாதித்த இலைகள் பழுத்து உதிர்ந்துவிடும். கவச் 0.2 சதவித கரைசல் மருந்து தெளித்து 4 நாட்கள் கழித்து இலைகளை பறிக்கவும். இலைகருகல் நோய் வெயில், மழைக்காலங்களில் ஏற்படும். இலைகளில் பழுப்பு நிறம் கொண்ட திட்டுகள் தோன்றி இலை உதிர்ந்து விடும். டைத்தேன் தெளிக்க வேண்டும். இதனை பின்பற்றுவதன் மூலம் மல்பெரி செடிகளை நோய் தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்தலாம், என்றார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment