தேனி;பனி காரணமாக நெல்லில் ஏற்படும் இலை கருகல் நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
தேனி, கோட்டூர், சீலையம்பட்டி, வீரபாண்டி, உப்புக்கோட்டை, உப்பார்பட்டி பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் முடிந்துள்ளன. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பனிப்பொழிவு இருந்தால், இலை கருகல் நோய் ஏற்படும். தற்போது பனிப்பொழிவு உள்ளதால்ல, நெல் நாற்றுகளில் இலைக்கருகல் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நோய் தாக்கிய இலைகளின் ஓரங்களில் இருந்து நடு இலைகள் வரை கருக ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் "ஸ்ட்ரெப் டோமைசீன்' மருந்தை 60 கிராம் வீதம் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.
மேலும் இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி தாக்கவும் வாய்ப்புகள் உள்ளன. லைச்சுருட்டுப்புழு தாக்குதலின் போது, இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு உட்புறத்தில் பச்சயம் சுருண்டப்படுவதால், இலைகள் வெண்மையாக இருக்கும். குருத்துப்பூச்சி தாக்குதலால் இலைகளின் தோகைகளில் ஓரங்கள் அரிக்கப்பட்டு, வெள்ளை நிறத்தில் பிசிறாக இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஒரு லிட்டருக்கு "அசிப்பேட்' மருந்தை 3 கிராம் வீதம் தெளிக்கலாம். அல்லது பாலிபோ மிடான் மருந்தை ஏக்கருக்கு 120 மி.லி.,தெளித்து கட்டுப்படுத்தலாம் ,என தேனி விவசாயத்துறை தெரிவித்துள்ளது.
Source : Dinamalar
No comments:
Post a Comment