Wednesday, December 16, 2015

சிங்கம்புணரி வட்டாரத்தில் உளுந்து சாகுபடி மானியம்

சிங்கம்புணரி வட்டாரத்தில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் துறை மானியம் வழங்குகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2015-16 ல், 166.50 எக்டேர் உளுந்து சாகுபடி இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது 15 வருடங்களுக்கு மிகாத வம்பன் ரகங்கள் 3,4,5,6,7.கோ 6,7 உளுந்து விதைத்துள்ள விவசாயிக்கு செயல் விளக்க திடல் மானியம் எக்டேருக்கு ரூ 2 ஆயிரத்து 200 ம் விதையில்லா மானியம் நூறு சதவீதம்,பயறு நுண்ணூட்டம் 5 கிலோ,பூஞ்சான உயிர்கொல்லி 2 ஆயிரத்து 500 கிலோ,திரவு வடிவிலான உயிர் உரங்கள் 1 லிட்டர் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ ஆயிரத்து 94 ரொக்க மானியம் வரவு வைக்கப்படும். சிங்கம் புணரியில் உள்ள வேளாண் வளர்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment