சிவகங்கையில் விவசாயிகள் 14 பேருக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டிராக்டர், பவர் டில்லர்களை கலெக்டர் மலர்விழி வழங்கினார். மாவட்ட அளவில் விவசாய பணிகளில் ஈடுபடும், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கும் நோக்கில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7 விவசாயிகளுக்கு ரூ.38.03 லட்சம் மதிப்பிலான 7 டிராக்டர்கள், ரூ.8.75 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது.
இதில், விவசாயிகள் பங்களிப்பு தொகை ரூ.29.28 லட்சம். அதே போன்று, 7 விவசாயிகளுக்கு ரூ.9.62 லட்சம் மதிப்பிலான பவர்டில்லர் வழங்கப்பட்டது. இதற்கு மானியம் ரூ.4.40 லட்சம். விவசாயிகள் பங்களிப்பு தொகை ரூ.5.22 லட்சம்.
Source : Dinamalar
No comments:
Post a Comment