திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 18ம் தேதி நடக்கிறது.
திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 18ம் தேதி, பகல் 11:00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய், மின்வாரியம், கூட்டுறவு, பொதுப்பணி, வேளாண்மை பொறியியல், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.எனவே, இம்மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.Source : Dinamalar
No comments:
Post a Comment